முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை விவகாரத்தில் ராகுல் திடீர் பல்டி: கேரள மக்களே முடிவெடுத்துக் கொள்ளட்டும் என கருத்து

திங்கட்கிழமை, 14 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

துபாய் : சபரிமலை விவகாரத்தை கேரள மக்களின் முடிவுக்கே விட்டுவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

போராட்டம்...

அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சபரிமலை விவகாரத்தில் அரசைக் கண்டித்து, கோயிலில் பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியும் போராடி வருகிறது.

அரசியல் செய்கின்றனர்...

ஆனால் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்வதை ஆதரிப்பதாகவும், அதனை வைத்து பாஜக அரசியல் செய்வதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுவரை கூறி வந்தார். பல நேரங்களில் இதுபற்றி கருத்து கூறுவதை தவிர்த்து வந்தார்.

மிகவும் சிக்கலாக...

இந்தநிலையில்,  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி, சபரிமலை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். ராகுல் காந்தி கூறியதாவது:-
“கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினருடன் சபரிமலை விவகாரம் தொடர்பாக பேசினேன். அவர்கள் தற்போதைய நிலைமையை எடுத்துரைத்தனர். முன்பிருந்ததைவிட கேரளத்தில் தற்போது நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது என்பதை அதன்மூலம் உணர்ந்து கொண்டேன்.

தெரிவிக்க முடியாத...

சபரிமலையில் பெண்கள் சுவாமி தரிசனம் செய்யலாமா அல்லது வேண்டாமா என்பதை அந்த மாநில மக்களே முடிவு செய்யட்டும். முன்பு, அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தேன். பாரம்பரியமும் காக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் தற்போது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, சபரிமலை விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க முடியாத நிலைமையில் இருக்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து