முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாழ்வா ? சாவா ? போட்டி: ஆஸி.க்கு எதிராக வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி - அடிலெய்டில் இன்று நடக்கிறது

திங்கட்கிழமை, 14 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

அடிலெய்டு : அடிலெய்டில் இன்று நடக்கும் 2-வது போட்டி வாழ்வா? சாவா? என்பதால் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆஸி. முன்னணி...

ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா சதமும், டோனி அரைசதமும் அடித்தனர்.

தீவிர பயிற்சி...

தவான், அம்பதி ராயுடு டக்அவுட் ஆனார்கள். விராட் கோலி 3 ரன்னில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக்கும் பெரிய அளவில் பேட்டிங் செய்யவில்லை.

வெற்றி பெறும் முனைப்பில்...

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி உள்ளது. அதேசமயத்தில், 2-வது ஒருநாள் போட்டியையும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.
தீவிர ஆலோசனை

பேட்டிங்கில் கவனம் செலுத்தும் வகையில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அதேபோல் சுழற்பந்து வீச்சாளரான சாஹலும் பயிற்சியில் ஈடுபட்டார். முதல் போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், 10 ஓவரில் 46 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பயிற்சியாளருடன் ஷமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை உயிரோட்டமாக வைத்துக்கொள்ளப்படும். இதனால் 2-வது இந்தியாவிற்கு வாழ்வா? சாவா? போட்டியாகும். இதனால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செல்பி - ஆட்டோகிராப்

முன்னதாக, வலைப்பயிற்சியில் ஈடுபட வரும் இந்திய வீரர்களைக் காண ரசிகர்கள் அங்கு ஏராளமானோர் திரண்டனர். ரசிகர்கள், கேப்டன் கோலி உள்ளிட்ட வீரர்களிடம் ஆர்வமுடன் செல்பி மற்றும் ஆட்டோகிராப் பெற்றுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து