முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால், ‌ஷரபோவா அடுத்த சுற்றுக்கு தகுதி

திங்கட்கிழமை, 14 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ரபேல் நடால், ஷரபோவா முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

2-வது சுற்றுக்கு...

இந்த ஆண்டின் முதல் கிராண்ட் சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. உலகின் இரண்டாம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான ரபேல் நடால் (ஸ்பெயின்) முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டக்வொர்த்தை எதிர்கொண்டார். இதில் நடால் 6-4, 6-3, 7-5 என்ற நேர்செட் கணக்கில் வென்று 2-வது சுற்று முன்னேறினார்.

கெவின் ஆண்டர்சன்...

மற்றொரு ஆட்டத்தில் 5-ம் நிலை வீரரான கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) 6-3, 5-7, 6-2, 6-1 என்ற கணக்கில் அட்ரியன் மனோரியாவை (பிரான்ஸ்) வீழ்த்தினார். டிமிட்ரோவ் (பல்கேரியா) வெர்ட்ஸ்கோவா (ஸ்பெயின்) ஆகியோர் முதல் சுற்றில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஷரபோவா வெற்றி...

2008 சாம்பியனும், தரவரிசையில் 30-வது இடத்தில் இருப்பவருமான ரஷிய வீராங்கனை மரியா ‌ஷரபோவா தொடக்க சுற்றில் இங்கிலாந்தை சேர்ந்த ஹேரியட் டார்ட்டை எதிர்கொண்டார். இதில் ‌ஷரபோவா 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார். 5-வது வரிசையில் இருப்பவரான ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-4, 6-2 என்ற நேர்செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த டெய்லர் டவுன்சென்டை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

கோஜர்ஸ் வெளியேற்றம்...

மற்ற ஆட்டங்களில் கார்சியா (பிரான்ஸ்) ஆர்யனா (பெலாரஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர். 14-வது வரிசையில் இருக்கும் ஜூலியா கோஜர்ஸ் (ஜெர்மனி) முதல் சுற்றிலேயே வெளியேறினார். அவர் 6-2, 6-7 (5-7), 4-6 என்ற கணக்கில் அமெரிக்க வீராங்கனை கோலின்சிடம் வீழ்ந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து