முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதத்தை முறியடிக்க ராணுவம் கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்காது: தலைமை தளபதி பிபின் ராவத் ஆவேசம்

புதன்கிழமை, 16 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : எல்லைப் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்க இந்திய ராணுவம் தயங்காது என்று ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
 தலைநகர் டெல்லியில் இந்திய ராணுவ தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.இதில் பிரதானமாக ராணுவத்தின் ராணுவ அணிவகுப்பில் எம்777 ஹவித்செர்ஸ், கே-9 வஜ்ரா பீரங்கிகள் உள்ளிட்ட நவீன போர்த் தளவாடங்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

 மேலும் இவ்விழாவில், எல்லைப் பகுதிகிளில் துணிச்சலோடு பங்காற்றிய ராணுவத்தினர் பலரும் வீரதீர விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இந்திய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் இதில் கலந்துகொண்டு விருதுகளை வழங்கிப் பேசியதாவது:

''இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ள நாடு பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிக்கிறது. இப்பிரச்சினையில் இந்திய ராணுவம் செயல்பட்டு வருகிறது. அதே வேளை ஜம்மு காஷ்மீரில் நீதிநெறியோடு நமது வல்லமையை நாம் நிலைநாட்டி வருகிறோம். எனினும் எல்லைப் பகுதியில் பயங்கரவாதத்தை முறியடிக்க ராணுவம் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்காது.

கிழக்குப் பிராந்தியத்தில் எல்லையில்  அமைதியும் பராமரிப்பதற்காக புதிய வழிகாட்டும் நெறிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. கிழக்கு எல்லையிலுள்ள இன்றுள்ள சூழ்நிலையை நாம் மீண்டும் பரிசீலனை செய்வோம்.  இவ்வாறு பிபின் ராவத் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து