முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பஸ்கள்

புதன்கிழமை, 16 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பொங்கல் சிறப்பு பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து 7 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்திருப்பதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து கடந்த 11-ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், 14-ஆம் தேதி வரை 13 ஆயிரத்து 871 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து