முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

பமாகோ : மாலியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் எம்.எஸ்.ஏ கிளர்ச்சி இயக்கத்தினர் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மாலி - நைஜர் எல்லையை ஒட்டிய பகுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள், பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், எம்.எஸ்.ஏ. கிளர்ச்சி இயக்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் மினாகாவிலிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் நடந்துள்ளது. இப்பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த பயங்கரவாதிகளின் வன்முறைத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலான மக்கள் புலானி இனத்தவர்கள் ஆவர்.

தற்போது நடந்த தாக்குதலுக்கு எம்.எஸ்.ஏ. இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இரு தரப்பினருக்கிடையிலான மோதலின் முடிவில் முதியவர்கள் உள்ளிட்ட 20 பேரை பயங்கரவாதிகள் கொலை செய்ததாகவும் அந்த இயக்கம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து