முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடைக்குள் பாம்பை மறைத்து வைத்து கடத்த முயன்ற நபர் கைது

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

பெர்லின் : ஜெர்மனியில் விமானத்தில் பாம்பை கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனி தலைநகர் பெர்லினின் சோபெல்ட் விமான நிலையத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், விமான நிலையத்துக்கு அவசர அவசரமாக வந்து இஸ்ரேல் செல்லும் விமானத்தை பிடிக்க முயன்றார். அவரது நடவடிக்கையை பார்த்து சந்தேகமடைந்த விமான நிலைய காவல் அதிகாரிகள், அந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரது பேண்டிற்குள் ஒரு துணிப்பையை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அந்த பையை பிரித்து சோதனையிட்ட போது அதில் சுமார் 16 அங்குல நீளமுள்ள பாம்பு ஒன்று இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அந்த நபரை உடனடியாக கைது செய்து பாம்பையும் மீட்டனர்.

அந்த நபர் கடத்த முயன்ற பாம்பு விஷத்தன்மையற்ற பாம்பு வகையை சேர்ந்தது. இந்த பாம்பை எடுத்து செல்வதற்கான முறையான ஆவணங்கள் பிடிப்பட்ட நபரிடம் இல்லை. எனவே, பிடிபட்ட நபர் பாம்பை காட்டி மிரட்டி, விமானத்தை கடத்த முயல்வதற்காக இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என ஜெர்மன் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து