முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக வாலிபர் கைது

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக கூறி இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். கைதான இளைஞர் 21 வயதான ஹஷர் ஜலால் தஹெப் என்றும், அவரிடம் இருந்து கைகளால் வரையப்பட்ட தரை தள வரைபடம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் வாஷிங்டனில் உள்ள அரசு அலுவலகங்கள் பலவற்றிற்கும் அவர் குறி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த தஹெப் என்ற இளைஞர் வின்னெட் கவுண்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து