முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

சண்டிகர் : பத்திரிகையாளரை கொலை செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

அரியானா மாநிலம் சில்சாந் அகரில் வசித்து வந்த பத்திரிகையாளர் சத்ரபதி. இவர் மாலை நாளிதழ் ஒன்றில் ஆசிரியராக இருந்தார். இவரது நாளிதழில் அரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக செய்தி வெளியிட்டார். இதையடுத்து 2002-ம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக, 2003-ம் ஆண்டு சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2006-ம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டது.

பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏற்கனவே அவர் அனுபவித்து வருகிறார். இதற்கிடையே, பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என அரியானா மாநிலத்தின் சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.

பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கான தண்டனை (நேற்று)17-ம் தேதியன்று அறிவிக்கப்படும் என அரியானா பஞ்ச்குலா நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பத்திரிகையாளரை கொலை செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், மற்ற குற்றவாளிகளான குல்தீப் சிங், நிர்மல் சிங், கிரிஷன் லால் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்கள் நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து