முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

102-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த 5 ரூபாய், 100 ரூபாய் நாணயங்கள் - முதல்வர் இ.பி.எஸ். வெளியிட துணை முதல்வர் ஓ.பி.எஸ். பெற்றுக் கொண்டார்

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த 5 ரூபாய் மற்றும் 100 ரூபாய் சிறப்பு நாணயங்களை சென்னையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, அதை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக்கொண்டார்.

மலர் தூவி மரியாதை

எம்.ஜி.ஆர் அவர்களின் 102-வது பிறந்தநாள் விழா அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சென்னை, கிண்டி, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நினைவாக அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதல்வர்  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அமைச்சர்கள்...

இந்நிகழ்வில், அமைச்சர்கள். திண்டுக்கல் சி. சீனிவாசன், செங்கோட்டையன் செல்லூர் கே. ராஜூ. தங்கமணி, எஸ். பி. வேலுமணி, ஜெயக்குமார், சி. வி.சண்முகம், கே. பி.அன்பழகன், சரோஜா, எம்.சி.சம்பத், கே.சி.கருப்பணன், காமராஜ், ஓ.எஸ். மணியன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், துரைக்கண்ணு கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன், பென்ஜமின், நிலோபர் கபீல். எம்.ஆர்.விஜயபாஸ்கர், மணிகண்டன், ராஜலெட்சுமி, க.பாண்டியராஜன், பாஸ்கரன், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், துணைச பாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.பிக்கள் வெங்கடேஷ் பாபு, ஜெயவர்தன், விஜயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் விருகை வி.எஸ். ரவி, அலெக்ஸாண்டர் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி கலந்து கொண்டனர்.

துணை முதல்வர்...

நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பொ.சங்கர், பொதுத்துறை சிறப்பு செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன், செய்தித்துறை கூடுதல் இயக்குநர்கள் எஸ்.பி. எழிலழகன் (செய்தி), உல.ரவீந்திரன் (மக்கள் தொடர்பு), கே. சாந்தி (தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம்), வாரியத் தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.மேலும், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நினைவாக அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதல்வர்  எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட, துணை முதல்வர். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பெற்றுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து