முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே ஜல்லிக்கட்டு 15 பேர் காயம்.

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      திண்டுக்கல்
Image Unavailable

 நத்தம்,- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சாணார்பட்டி -நத்தமாடிப்பட்டி  கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. முன்னதாக  கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக ஜல்லிகட்டு காளைகள் வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்து வந்தது. இந்த ஜல்லிகட்டு போட்டிக்காக திண்டுக்கல்  திருச்சி,மதுரை, சிவகங்கை, தேனி  உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து  373 காளைகளும், 304 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.  இவ்விழாவில் சிறப்பாக விளையாடிய  ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும், தங்ககாசு, வெள்ளிக்காசு, ஹோம்தியேட்டர், வாசிங்மிசின், சைக்கிள்,கட்டில்,பீரோ, பித்தளை மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள்   வழங்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதலாவதாக நடைபெறும் ஜல்லிக் கட்டு போட்டி என்பதால் போட்டியினை காண  பல்வேறுபகுதிகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த விழாவினை கண்டு ரசித்தனர். பாதுகாப்பு பணிக்காக 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருந்தனர்.இதில்  9 மாடுபிடிவீரர்கள், 2 பார்வையாளர்கள், 4 மாடுஉரிமையாளர் உள்பட மொத்தம் 15 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைத்த ஒருவர்  திண்டுக்கல் அரசு மருத்துவமனை அனுமதிபட்டுள்ளார்...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து