முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கோலாகலம்: எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிலைக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க. நிறுவனத் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மலர் தூவி மரியாதை...

எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாள் விழா அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்க்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், திரளாகக் கூடியிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினர். தலைமை கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் மலர்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த பகுதி முழுவதும் ஏராளமான அ. தி.மு.க. கொடி, தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. தொண்டர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

அமைச்சர்கள்...

அ. தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, பி. தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், காமராஜ், ஓ.எஸ்.மணியன், டாக்டர் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, பெஞ்சமின், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., கே.பி.முனுசாமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, என்.ஆர். சிவபதி, வைகைசெல்வன், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, தி.நகர் பி.சத்தியா, விருகை வி.என். ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், டி.ஜி.வெங்கடேஷ்பாபு, அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், மாநில இலக்கிய அணி இணை செயலாளர்கள் நடிகர் ஜெயகோவிந்தன், டி.சிவராஜ், ஆர்.எம்.டி. ரவீந்திர ஜெயன், வழக்கறிஞர் ஆர். சதாசிவம், உட்பட எராளமான பேர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகள்...

அ. தி.மு.க. தலைமை கழகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்ததை தொடர்ந்து, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமைக் கழகத்தில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ. தமிழ்மகன் உசேன் ஏற்பாட்டின்பேரில் அ.தி.மு.க.வினருக்கு சர்க்கரைப் பொங்கலும், அதே போல், தலைமைக் கழகம் அருகே, தென் சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தி.நகர் சத்தியா எம்.எல்.ஏ., ஏற்பாட்டின்பேரில், பெருந்திரளான அளவில் திரண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் வெஜிடபிள் பிரியாணி, புடவை, பாத்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதேபோல், தமிழகம் முழுவதும் நேற்று எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து