முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் குண்டு வீச்சு: 3 ராணுவ வீரர்கள் காயம்

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 3 வீரர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஜீரோ பிரிட்ஜ் உள்ளது. இதன் அருகில் பாதுகாப்பு படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அங்கு பணியில் இருந்த 3 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 11-ம் தேதி லால் சவுக் பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் யாரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து