முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகளவு தொழில் துவங்க இந்தியா தயாராக உள்ளது: குஜராத் மாநாட்டில் பிரதமர் பேச்சு

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

காந்திநகர், தற்போது இந்தியாவில் முன்னர் இல்லாத அளவிற்கு தொழில் துவங்க வாய்ப்புகள் உருவாகி உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி காந்திநகரில் நடைபெறும் உலகளாவிய வர்த்தக கண்காட்சியை நேற்று தொடங்கி வைத்தார். வரும் 20-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பிரதமர் பேசியதாவது:-

எளிதாக தொழில் துவங்கும் நாடுகளின் உலக வங்கியின் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறியுள்ளது. முதல் 50 இடங்களுக்குள் வரும் வகையில், கடுமையாக உழைக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன். உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவை, இந்தியாவின் பொருளாதாரம் குறித்து திருப்தி தெரிவித்து உள்ளன. இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளவற்றை அகற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

இந்தியாவிற்கு அடிக்கடி வருபவர்கள் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர்வார்கள். தொழில் செய்வதை எளிமையாக்கி உள்ளோம். ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது மற்றும் வரிகளை சீர்திருத்தம் செய்தது செலவை குறைத்து உள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது, அதிகளவு தொழில் துவங்க இந்தியா தயாராக உள்ளது.

 இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து