முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையம் அய்யனார் கோவில் மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர் சிவஞானம்

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2019      விருதுநகர்
Image Unavailable

    விருதுநகர் -      விருதுநகர் மாவட்ட  சுற்றுலா துறை சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் .   இந்த ஆண்டு பொங்கல் விழா, மாட்டுப்பொங்கல் அன்று மலை வாழ் மக்களுடன்  ராஜபாளையம் அய்யனார் கோயிலில்
 நடைப்பெற்றது .சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலா அலுவலர் எஸ் .வெங்கடாசலபதி மற்றும் உதவி சுற்றுலா அலுவர் செய்திருந்தனர் .இப்பொங்கல் விழாவில் ,மாவட்ட ஆட்சியர் சிவஞானம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ராஜராஜன்  தமது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
கோ பூஜை மற்றும் பொங்கல் வழிபாட்டுடன் விழா துவங்கியது . கரகாட்டம், ஒயிலாட்டம், பாட்டுக்கு பாட்டு, பட்டி மன்றம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன. தமிழக நொறுக்கு தீனிகள் மற்றும் இனிப்பு வகைகள் குறித்த கண்காட்சியும் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதில் 30 பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் கரும்பு, அரிசி மூடைகளுடன் வீட்டுக்கு தேவையான பாத்திரங்கள், பாய் தலையணை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை கலெக்டர் சிவஞானம், எஸ்.பி., ராஜராஜன் வழங்கினர்.  பழங்குடியின மக்களுக்கான ஜாதி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.மேலும்,சுமார் 10,500 மரக்கன்றுகளை நட்டு ,தண்ணீர் ஊற்றி பராமரித்து வரும் நக்கனேரியை சேர்ந்த கருப்பையா என்பவருக்கும்,தெற்கு வெங்காநல்லூரை சேர்ந்தவர்  விவசாயி விக்னேஸ்வரன் ,இவர்  சுமார்  110 ஏக்கரில் இயற்கையான முறையில் விவசாயம் செய்து வருகின்றார் .இருவருக்கும் ,பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவகிக்கப்பட்டனர்.
  அய்யனார் கோயில் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுடன் கொண்டாடப்பட்ட விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர்  உதயகுமார், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சுரேஷ் , கலெக்டர்  நேர்முக உதவியாளர்(பொது ) செந்தில்குமாரி, ஆர்.டி.ஓ.,க்கள், தாசில்தார்கள், பி.டி.ஓ.,-க்கள் உள்ளிட்ட வருவாய் துறை உயர் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து