முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல்: முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் 11 தொழிற் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவையில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முதல்வர் தலைமையில்...

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஜெயகுமார், உதயகுமார் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், காமராஜ், துரைக்கண்ணு, சி.வி.சண்முகம், சரோஜா, ஓ.எஸ்.மணியன், பெஞ்சமின், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, பாண்டியராஜன், மணிகண்டன், விஜயபாஸ்கர், ராஜலட்சுமி, வளர்மதி, சேவூர் ராமச்சந்திரன், பாஸ்கரன், தலைமைசெயலாளர் கிரிஜாவைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்ட்டி, மற்றும் உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மானியக் கோரிக்கைகள்...

இந்த கூட்டத்தில் வரும் 23, 24-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் தொழில் முதலீட்டு மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 11 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் கவர்னர் உரையைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் பட்ஜெட் தாக்கல் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெறும் மானியக்கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

மாநாட்டு அழைப்பிதழ்...

கடந்த 18 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெற்ற இரு அமைச்சரவை கூட்டங்களில் 16 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கும், 14 தொழிற்நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 16 தொழிற்நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடும், அதனை அடுத்து 14 நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ரூ.30,500 கோடி மதிப்பிலான முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தொழிற்நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே முதலீட்டு மாநாட்டின் அழைப்பிதழ்களை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று காலை நேரில் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து