முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாசனத்திற்காக 40 நாட்களுக்கு சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, பாசனத்திற்காக சாத்தனூர் அணையில் இருந்து வரும் 23-ம் தேதி முதல் 40 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 2019-ம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 7543 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் இடது மற்றும் வலது புறக் கால்வாய்களில் முறையே  விநாடிக்கு 150 கன அடி மற்றும் விநாடிக்கு 200 கன அடி வீதம் 23.1.2019 முதல் 3.3.2019 வரையிலான 40 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீரை வழங்குவதற்கும், திருக்கோவிலூர் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு 2,500 ஏக்கர் நிலங்கள்  பயன்பெறும் வகையில் இரண்டாம் போக சாகுபடிக்கு 600 மி.க. அடி நீரினை நீர் பங்கீடு விதியின்படி பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதத்திற்குள், தேவைக்கேற்ப, மூன்று தவணைகளில் வழங்கவும் சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 10043 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து