முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம்: ஒரே மேடையில் 22 தலைவர்கள் பங்கேற்பு

சனிக்கிழமை, 19 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நடத்திய எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த பொதுக்கூட்டத்தில் 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 

பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், பா.ஜ.கவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நேற்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். நேற்று காலை முதலே பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த  மைதானத்திற்கு ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். தலைவர்கள் பேசுவதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது.  தொண்டர்கள் அனைவருக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் சென்று சேரும் வகையில் ஆங்காங்கே எல்.இ.டி தொலைக்காட்சித் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து