முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொகுசு விடுதியில் தங்கியிருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா

சனிக்கிழமை, 19 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலைக்கு மத்தியில், குருகிராமத்தில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை திரும்பி வரும் படி எடியூரப்பா அழைத்துள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜ.க. தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் திரும்ப பெற்றனர். பா.ஜ.க, தனது எம்.எல்.ஏ.க்களை அரியானா மாநிலம் குருகிராமத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்தது. அவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இது ஒருபுறமிருக்க, அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிஹோளி தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் தனித்து செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் பா.ஜ.க.வில் சேரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. பெங்களூரில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் பங்கேற்கவில்லை. ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு இணங்கக்கூடாது என கட்சி எம்.எல்.ஏ.க்களை கட்சியின் தலைவர் சித்தராமையா கேட்டுக்கொண்டார். இதனால் கர்நாடக அரசியலில் குழப்பம் நீடிக்கிறது. ஆனால் இந்த குழப்பத்திற்கு பா.ஜ.க. காரணம் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இல்லாததே இந்த குழப்பத்திற்கு காரணம் என்றும் பா.ஜ.க. மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்தார். அத்துடன் குருகிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் திரும்பி வரும்படி கேட்டுக்கொண்டார். எனவே, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பெங்களூரு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து