முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்: நார்வே மக்களுக்கு பிரதமர் எர்னா வேண்டுகோள்

சனிக்கிழமை, 19 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

ஆஸ்லோ, நார்வேயில் பிறப்பு விகிதம் குறைவாக இருந்தால் இனி வரும் காலத்தில் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் நாட்டிற்கு அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் தேவை என பிரதமர் கூறி உள்ளார். 

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் எர்னா சோல்பெர்க் என்ற பெண் தலைவர் பிரதமராக உள்ளார்.

சமீபத்தில் அவர் நாட்டு மக்களுக்கு ஒரு செய்தி விடுத்தார். அந்தச் செய்தியில் அவர், “நமது நாட்டுக்கு இப்போதைய தேவை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள்தான். இதை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை என்று கருதுகிறேன்” என கூறி உள்ளார். 
மேலும் “இனி வரும் காலத்தில், இதேபோல் நாடு இருந்தால் (பிறப்பு விகிதம் குறைவாக இருந்தால்) நாம் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்” எனவும் அவர் எச்சரித்தார்.

இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக நார்டிக் நாடுகள் என்று அழைக்கப்படக்கூடிய நார்வே, சுவீடன், டென்மார்க் , பின்லாந்து, ஐஸ்லாந்து நாடுகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து