முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் பீரங்கி தொழிற்சாலையை குஜராத்தில் பிரதமர் திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

ஹஜிரா, குஜராத்தில் உள்ள எல் அண்டு டி நிறுவனத்தின் பீரங்கி தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

மத்திய அரசு ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் எல் அண்டு டி நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு ராணுவ அமைச்சகத்திடம் கே9 வஜ்ரா என்ற ராணுவ பீரங்கிகள் தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தப்படி ரூ. 4,500 கோடியில் 100 பீரங்கிகள் வழங்க வேண்டும்.

இதற்காக குஜராத் மாநிலத்தில் சூரத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஹஜிரா என்ற இடத்தில் உள்ள எல் அண்டு டி நிறுவன உற்பத்தி வளாகத்தில் 40 ஏக்கரில் பீரங்கி உற்பத்தி பிரிவை தொடங்கியுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் தொழிற்சாலை வளாகத்தையும், தயாராகி வரும் பீரங்கிகளையும் அவர் பார்வையிட்டார்.

கே9 வஜ்ரா ராணுவ பீரங்கியின் தொழில்நுட்பம் தென்கொரிய நிறுவனத்திடம் இருந்து பெறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தமும் இந்த விழாவில் கையெழுத்தானது.

இது பற்றி பிரதமர் மோடி தனது டுவிட்டர் வலைத்தளத்தில், இந்த நிறுவனத்தின் முழு அணியினரையும் இதற்காக நான் பாராட்டுகிறேன். இங்கு கே9 வஜ்ரா பீரங்கி உற்பத்தி செய்யப்படுவது நாட்டின் பாதுகாப்புக்கும், இந்திய ராணுவத்துக்கும் முக்கிய பங்காற்றுவதாகும். பாதுகாப்பு துறையிலும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை ஊக்குவிப்பதே நமது முயற்சி. தனியார் நிறுவனங்களும் இதனை ஆதரிக்கும் நோக்கத்தில் தனது பங்களிப்பை வழங்குவதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் வெளிநாட்டு உதவியின்றி அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. தொழில்நுட்பம் மட்டுமே வெளிநாட்டில் இருந்து பெறப்படுகிறது. இந்திய பாதுகாப்பு துறைக்கு ஆயுதங்கள் வழங்கும் முதல் தனியார் தொழிற்சாலை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து