முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் கோவில் கலசம் கீழே விழுந்ததாக பரவிய வதந்தி! நள்ளிரவில் கோலம் போட்டு பெண்கள் வழிபாடு!!

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருச்செந்தூர் கோவில் கலசம் உடைந்து கீழே விழுந்ததாக பரவிய வதந்தியால்  திருமங்கலம்,திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள் தங்களது வீட்டு முன் நள்ளிரவில் கோலமிட்டு,தீபமேற்றி வழிபாடு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விதமான வதந்திகளை பரவச் செய்து பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்துவது சிலரது வழக்கம்.இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் கலசம் உடைந்து கீழே விழுந்து விட்டதாகவும் இதனால் வீட்டிலுள்ள ஆண்களின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று வதந்திகள் நேற்று முன்தினம் மாலை காற்றைவிட வேகமாக பரவியது.இந்த அபாயத்திலிருந்து ஆண்களை காப்பாற்றிக் கொள்வதற்கான பரிகாரமாக நள்ளிரவில் வீட்டு முன் கோலமிட்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று வழிபாடு செய்திட வேண்டும் என்ற தகவலும் வதந்தியுடன் சேர்ந்தே பரவியது.இது வதந்தியாக இருந்தாலும் கூட தங்கள் வீடுகளில் உள்ள ஆண்களுக்கு தீங்கு நேர்ந்துவிடக் கூடாது என்பதில் தாய்மார்கள் கண்ணும் கருத்துமாக இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் தங்களது வீட்டுமுன் கோலமிட்டு அதில் தீபமேற்றி  னார்கள்.பின்னர் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று குரலெழுப்பி வழிபாடு நடத்தினார்கள்.இதன் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரையில்பெண்கள் தங்களது வீட்டு முன் கோலமிட்டு அதில் தீபமேற்றி பரிகாரம் செய்தபடி இருந்தனர்.இது போன்ற பரிகார நிகழ்வுகளால் திருமங்கலம் திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நேரம் முழுவதும் பெண்களின் நடமாட்டத்தினால் பரபரப்பாக காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து