முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து ஆய்வு நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.

சந்திரனில் சீனா தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளது. சந்திரனின் இருட்டு பகுதியில் ஆராய்ச்சி செய்ய சாங் - இ 4 என்ற விண்கலத்தை அங்கு அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் இம்மாத தொடக்கத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவும் சந்திரனில் மீண்டும் தனது ஆய்வை தொடர ஆர்வமாக உள்ளது. அதை சீனாவுடன் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆலோசனையை சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் சமீபத்தில் நாசா நடத்தியது.

அப்போது சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பூமியில் இருந்து வேறு கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னோடியாக அடுத்த ஆண்டு அதாவது 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் சந்திரனுக்கு ரோபோவை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து