முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

தாவோஸ் : உலகில் பெண்கள் தங்கள் வீடுகள் மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளுதல், வீட்டு வேலை செய்வதன் மதிப்பு, உலகின் மிகப்பெரிய நிறுவனமான ஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட 43 மடங்கு ஆகும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்தர கூட்டத்தின் 5 நாள் கூட்டத்தில் சர்வதேச உரிமை குழு ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கையை வெளியிட்டு கூறியதாவது:-

இந்தியாவில், தங்கள் வீடுகள் மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளும் பெண்களின் சம்பளம் இல்லாத வேலை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சதவீதம் 3.1 மதிப்பு ஆகும். உலகம் முழுவதும் பெண்கள் செய்யும் சம்பளம் இல்லாத வேலை அதாவது, வீடு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு ரூ. 10 டிரில்லியன் டாலர் மதிப்பு ஆகும். இது உலகின் மிகப்பெரிய நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தை விட 43 மடங்கு ஆகும். பெண்கள் நகர்ப்புறங்களில் நாள் ஒன்றுக்கு 312 நிமிடங்களும், கிராமங்களில் நாள் ஒன்றுக்கு 291 நிமிடங்களும் வீட்டு வேலைகளில் செலவழிக்கிறார்கள். ஒப்பீட்டளவில், ஆண்கள் நகர்ப்புறத்தில் 29 நிமிடங்களும் கிராமப்புறங்களில் 32 நிமிடங்களும் வீட்டு வேலைக்காக செலவழித்து வருகிறார்கள் என அந்த  ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து