முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவில்லிபுத்தூரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 102 வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம்

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர் - திருவில்லிபுத்தூரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 102 வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா தலைமையில் நடைபெற்றது. பின்னர் இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பேசும் போதுபுரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் ஆட்சியில் ஏழை, எளியவர்களுக்கு பல நன்மைகளைச் செய்தார். எம்ஜிஆர் சிறுவயதில் ஏழ்மையில் இருந்த போது பசியின் துயரத்தை அனுபவித்திருக்கிறார். அதனால் தன்னைப்போல் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பசியோடு இருக்கக்கூடாது என்று சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். குழந்தைகளுக்கு இலவச செருப்பு, சீருடைகள் வழங்கி மகிழ்ந்தார்.
எம்ஜிஆர் ஒரு சமயம் காரில் சென்று கொண்டிருந்த போது மழையில் நனைந்து கொண்டே சைக்கிள் ரிக்ஷாவை ஒரு முதியவர் ஓட்டிச் சென்றதைப் பார்த்து மனம் வருந்தினார். மறுநாள் காலையில் முதல் வேலையாக சென்னையில் உள்ள அணைத்து சைக்கிள் ரிக்ஷா தொழிலாளர்களுக்கும் தனது சொந்தசெலவில் மழைகோட் வாங்கிக் கொடுத்தார். மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் நமது புரட்சித்தலைவி அம்மா அவர்களை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார். நம்முடைய புரட்சித்தலைவி அம்மா அவர்களும் நல்லாட்சி புரிந்தார்கள். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  உயர்கல்விபயில உதவித்தொகை மற்றும் விலையில்லா மிதிவண்டி மடிக்கணினி வழங்கினார்கள். கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பைக் கொடுத்தவர் ஜெயலலிதா . விவசாயிகளுக்கு விலையில்லா ஆடுகள், மாடுகளை வழங்கினார்கள். இது போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை ஏழை, எளியவர்களுக்கு ஜெயலலிதா  வழங்கினார்.
      அம்மாவின் வழியில் அம்மாவின் நல்ஆசியோடு  மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் நல்லாட்சி புரிந்து வருகிறார்கள்.
கஜா புயலினால் தமிழகம் முழுவதும் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அதை உடனடியாக சீர் செய்யப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் அணைத்து மக்களும் புயலினால் பாதிப்பு. தமிழ்நாடு முழுவதும்  விவசாயிகள் மழையின்றி பாதிக்கப்பட்டதை மனதில் கொண்டு முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தாயுள்ளத்தோடு பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூபாய் 1000 ரொக்கமாக வழங்கினார்கள்.
அதிமுக அரசு என்றுமே ஏழைகளின் அரசு. இரவு, பகல் பாராமல் இந்த நாட்டில் ஏழைகளே இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பாடுபடக்கூடிய ஒரே அரசு அஇஅதிமுக தான்" இவ்வாறு பேசினார்.கூட்டத்தில் மாநில மகளிரணி இணைச் செயலாளர் சக்தி கோதாண்டம்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, நகர் கழகச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், ஒன்றியச் செயலாளர் மயில்ச்சாமி, அரசு வக்கீல் ராஜா,மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் மீராதனலட்சுமிமுருகன்,நகர் கழக துணை செயலாளர் வன்னியராஜ்,நகரப் பொருளாளர் கருமாரிமுருகன், கவுன்சிலர்கள் அங்குராஜ்,கந்தசாமி, சேதுராமன்,மற்றும் நெல்லையப்பன்,தங்கமுத்துமணி, கணேசன்,நாகபூபதி,சரவணமுனி,கவிதாபரமசிவம், உட்பட பேரூர், நகர், கிளை , கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து