முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போபால் தொகுதியில் நடிகை கரினா கபூரை போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டம்

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

போபால் : போபால் தொகுதியில் பிரபல இந்தி நடிகை கரீனா கபூரை போட்டியிட வைக்க காங்கிரஸ் பரிசீலித்து வருகிறது.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகரான போபால், பா.ஜ.க.வின் நீண்டநாள் கோட்டையாக உள்ளது. சமீபத்தில் நடந்த மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ், வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் போபால் தொகுதியை பா.ஜ.க.விடம் இருந்து மீட்க வியூகத்தை வகுத்து வருகிறது. இதற்காக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ்வர் நிக்ரா தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதையடுத்து போபால் தொகுதியில் பிரபல இந்தி நடிகை கரீனாகபூரை போட்டியிட வைக்க காங்கிரஸ் சார்பில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக நடிகை கரீனா கபூர் மறைந்த கிரிக்கெட் வீரர் மன்சூர்அலிகான் பட்டோடியின் மருமகளாக இருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் பட்டோடி மருமகளான நடிகை கரீனா கபூரை களம் இறக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள். தற்போது மத்திய பிரதேசத்தில் அரசியல் சூழ்நிலைகள் மாறி உள்ளதால் கரீனா கபூரை வெற்றி பெற செய்ய முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்புகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து