முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலில் ஆர்வம் இல்லை என நடிகர் அஜித் திறந்த மனதுடன் கூறியுள்ளார் - அமைச்சர் ஜெயகுமார் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அரசியலில் ஆர்வம் இல்லை என நடிகர்  அஜித் திறந்த மனதுடன் கூறியுள்ளார் என்றும், அவர் தொழில் பக்தி கொண்டவர் என அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின், அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவை வருமாறு:-
கேள்வி: பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா?
பதில்: கூட்டணிக்கான கதவுகளை நாங்கள் மூடவில்லை. அதற்கான கதவுகள் திறந்திருக்கின்றன. ஆனால், யார் கூட்டணியில் இணைய வேண்டும், இணையக் கூடாது என்பது குறித்து அனைவரும் சேர்ந்து முடிவெடுப்போம். தனியொருவர் அதனை முடிவு செய்ய முடியாது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை.
கேள்வி: கொடநாடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின், முதல்வர் மீது குற்றம் சுமத்தியுள்ளாரே?
பதில்: எந்தக் கொம்பனாலும் அ.தி.மு.க.வை உடைக்க முடியாது. ஆயிரங்காலத்துப் பயிராக, நிழல் தரும் மரமாக அ.தி.மு.க. விளங்கும். இப்போது, அ.தி.மு.க.வுக்கு எதிராக உப்பு சப்பில்லாத ஆயுதத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள். இதிலும் மண்ணைக் கவ்வுவார்கள். கொடநாடு விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு தி.மு.க.வினர் ஜாமீனுக்காக உதவியுள்ளனர். இதில் பெரிய அளவுக்கு மர்மம் இருக்கிறது. உரிய விசாரணை நடைபெற்று சட்டத்தின் முன் குற்றவாளிகள் நிறுத்தப்படுவர்.
கேள்வி: இந்த விவகாரத்தில் விசாரணையை எதிர்கொள்ள முதல்வர் தயங்குகிறாரா?
பதில்: விசாரணைக்குத் தயங்கவில்லை. அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
கேள்வி: அரசியலில் ஆர்வம் இல்லை என நடிகர் அஜித் கருத்து தெரிவித்துள்ளாரே?
பதில்: அஜித் தொழில் பக்தி கொண்டவர். தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பவர். அது பாராட்டத்தக்க விஷயம். மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்த போது, பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா நடைபெற்ற போது, மேடையிலேயே நிகழ்ச்சிக்கு வருவதற்கு தாங்கள் எவ்வாறு வற்புறுத்தப்பட்டோம் என்பது குறித்து தைரியமாகச் சொன்னார். என் ஆதரவு யாருக்கும் இல்லை என துணிச்சலாகக் கூறியுள்ளார். திறந்த மனதுடன் தன் நிலையை வெளிப்படுத்தியிருக்கிறார். நல்ல விஷயம். தெளிவான பதிலை அளித்திருக்கிறார்.
கேள்வி: தலைமைச் செயலகத்தில் சாமி கும்பிடக் கூடாது என ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே?
பதில்: தலைமைச் செயலகத்தில் 20 சங்கங்கள் ஆண்டுதோறும் ஆயுத பூஜை கொண்டாடுகின்றனர். இறைவனை வழிபடுவது தவறா? ஸ்டாலின் போன்று சிறுபிள்ளைத் தனமான தலைவர் இருப்பதால் தமிழக மக்கள் வெட்கித் தலைகுனிகின்றனர்.  இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து