முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

வெல்லிங்டன் : நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

வரலாற்று சாதனை

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 3 விதமான தொடர்களில் விளையாடியது. அந்நாட்டு மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இதனை அடுத்து, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று(ஜன.23) நடைபெற உள்ளது.

சிறந்த வீரர்கள்...

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை, பேட்டிங்கில் கேன் வில்லியம்சன், டெய்லர், கப்தில், லாதம் என ஒரு பட்டாளமே உள்ளது. பந்துவீச்சில் போல்ட், டிம் சவுதி, மிச்செல் சாண்ட்னெர் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இந்திய அணியை திணறடிக்கும் வலிமையில் நியூசிலாந்து உள்ளது.

நல்ல ஃபார்மில்...

இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தினாலும், வலுவற்ற அணியை வீழ்த்தியதாகவே பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்களில் ஷமி, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்திய அணியின் பேட்டிங்கில் டாப் ஆர்டர்தான் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. தொடக்க வீரர் ஷிகர் தவான் ஃபார்முக்கு திரும்பவில்லை. 4-வது வீரராக தோனி களமிறங்கி அசத்தியுள்ளார். ஆனால், அவர் 5-வது இடத்தில் இறங்குவதையே விரும்புவதாக கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். அதனால், 4-வது இடத்தில் இறங்குவது யார் என்ற கேள்வியுள்ளது.

சவால் மிகுந்தது...

நியூசிலாந்து மண்ணில் 34 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 10 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பைக்குத் தயார் செய்யும் வகையில் இந்தத் தொடர் சவால் மிகுந்ததாக இருக்கும் என தெரிகிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி இன்று (ஜன.23) காலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து