முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.யில் சிறப்பாக செயல்பட்ட இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவுக்கு ரூ.20 லட்சம் போனஸ் - பி.சி.சி.ஐ. அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு பி.சி.சி.ஐ. போனஸ் அறிவித்துள்ளது.

வரலாற்றுச் சாதனை

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 3 விதமான தொடர்களில் விளையாடியது. அந்நாட்டு மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்தது.

ரூ.25 லட்சம் பரிசு...

முன்னதாக, ஆஸ்திரேலியாவில் சாதித்த இந்திய அணிக்கு பல லட்சங்களில் பரிசுத்தொகையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்தது. போட்டி ஒன்றிற்கு, ஆடும் லெவனில் இருந்த வீரர்களுக்கு, அதாவது மைதானத்தில் விளையாடிய வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சமும், மாற்று வீரர்களுக்கு தலா  ரூ.7.5 லட்சமும் அறிவிக்கப்பட்டது. அத்துடன், பயிற்சியாளர்களுக்கு ரூ.25 லட்சமும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. பயிற்சியாளர் அல்லாத மற்ற பணியாளர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் விதிகளின்படி பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் பி.சி.சி.ஐ. கூறியது.

ஊக்கத்தொகை...

இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடரின்போது வீரர்களை தேர்வு செய்வதில் சிறப்பாக செயல்பட்ட தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. அதன்படி, எம்.எஸ்.கே.பிரசாத், சரண்தீப் சிங், ஜதின் பராஞ்பே, ககன் கோடா மற்றும் தேவாங் காந்தி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

பிரித்வி ஷா காயமடைந்தபோதும், கே.எல்.ராகுல் மற்றும் முரளி விஜய் சொதப்பியபோதும் மாற்று வீரர்களை தேர்வு செய்வது கடினமாக இருந்தது. அதேபோல், மயங்க் அகர்வால் மற்றும் டோனி ஆகியோரின் தேர்வு அணிக்கு பலமாக அமைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து