முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலியான தகவல்களை பரப்ப வேண்டாம் - ஏ.ஆர் முருகதாஸ் கோரிக்கை

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      சினிமா
Image Unavailable

Source: provided

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியான படம் சர்க்கார். சர்கார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தொடங்கிய சர்ச்சை கதை திருட்டு, படத்திற்கு தடை என படம் வெளியான பின்னரும் தொடர்ந்தது. ஒரு வழியாக படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியானது. இந்தப் படமும் அரசியல் படமாக இருக்கும் எனவும் படத்தின் தலைப்பு நாற்காலி என்றும் பலவிதமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் தான் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் நாற்காலி இல்லை என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து