முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓவல் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு வித்தியாசமான வரவேற்பு!

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஓவல் : நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் விளையாடுவதற்கான ஓவல் மைதானம் வந்த இந்திய அணி வீரர்களுக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா முன்னிலை...

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிகள் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒரு நாள் தொடர் ஜன.23-ல் தொடங்கியது. நேப்பியரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

நடனமாடி வரவேற்பு

இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று மவுண்ட் மான்கனூயி நகரில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று (ஜன.25) ஓவல் மைதானம் வந்து சேர்ந்தனர். இந்திய வீரர்களை, பழங்குடி மக்கள் தங்கள் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் நடனமாடி வரவேற்றனர்.

இந்த வித்தியாசமான வரவேற்பு வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து