முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி. வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டும்: கேப்டன் வில்லியம்சன்

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

2வது ஒருநாள் போட்டி இன்று மவுண்ட் மவுங்கனுஹில் உள்ள பே-ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் நியூஸிலாந்து வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

பயிற்சிக்கிடையே பேட்டியளித்துள்ள நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன், “இந்திய வீரர்கள் திறமையானவர்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர்களுடன் நாங்கள் பல போட்டிகளில் மோதியுள்ளோம். அவர்கள் நல்லவர்கள் என்பதால், நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதேசமயம் எங்கள் வீரர்களிடம் அதைவிட அதிகம் எதிர்பார்க்கிறோம். அதற்காக நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம்” என்றார்.

_____________

ரஞ்சி ஃபைனலில் விதர்பா அணி!

உள்ளூர் போட்டியான ரஞ்சி டிராபி தொடர் இப்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் முதன்முறையாக அரையிறுதிக்கு நுழைந்த கேரள அணி, நடப்பு சாம்பியன் விதர்பாவை எதிர்கொண்டது. இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி, கேரள மாநிலம் வயநாட்டில் நடந்து வந்தது. கேரள அணி, முதல் இன்னிங்ஸில் 106 ரன் எடுத்தது. விதர்பா வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் அபாரமாக பந்துவீசி, 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய விதர்பா, 208 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கேரள அணி தரப்பில் சந்தீப் வாரியர் 5 விக்கெட்டுகளும்  பசில் தம்பி 3 விக்கெட்டுகளும் நிதீஷ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

பின்னர் கேரள அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. உமேஷ் யாதவ் மற்றும் யாஷ் தாகூரின் சிறப்பான பந்துவீச்சில், அந்த அணி வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை மளமளவென இழந்தனர். இதையடுத்து அந்த அணி, 24.5 ஓவரில் 91 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இன்னிங்ஸ் மற்றும் 11 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. உமேஷ் 5 விக்கெட்டும் தாகூர் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகாவும் சவுராஷ்ட்ரா அணியும் மோதி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, விதர்பா அணியுடன் இறுதி போட்டியில் மோதும்.

___________

பாக். கேப்டன் சர்பிராஸ் அகமதுவை மன்னித்துவிட்டோம்  - டு பிளிசிஸ்

பாக். - தென்ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி டர்பன் நகரில் நடைபெற் றது. இதில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த வெற்றிக்கு மூன்றாவது வீரராக களமிறங்கிய, வான்டர் டஸ்செனும் பெலுகுவாயோவும்தான் காரணம். இவர்கள் ஆடிக்கொண்டிருந்தபோது, விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்பிராஸ் அகமது ஆத்திரத்தில், ’’கருப்பு பயலே, இன்று உன் அம்மா எங்கு அமர்ந்து இருக்கிறார்? உனக்கு இன்று என்ன கூறுவதற்காக அவரை இங்கு அழைத்து வந்திருக்கிறாய்?’’ என இந்தியில் பேசியுள்ளார். இது  ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவானது.

இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டார் சர்பிராஸ் அகமது. ’’யாரையும் குறிப்பிட்டு நான் அவ்வாறு பேசவில் லை.  யாருக்கும் கேட்க வேண்டும் என்று கூட பேசவில்லை. துருதிஷ்டவசமாக என் பேச்சு ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள் ளது. இனி இதுப்போன்ற தவறுகள் நடக்காது” என தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஐசிசி ஆட்ட நடுவர் ரஞ்சன் மதுகலே, சர்பிராஸ் அகமதுவை சந்தித்து இது குறித்துப் பேசினார்.

இந்நிலையில் சர்பிராஸ் மன்னிப்புக் கேட்டதால், அவரை மன்னித்துவிட்டதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கேப்டன் டுபிளிசி ஸ் தெரிவித்துள்ளார். ‘’தென்னாப்பிரிக்காவுக்கு விளையாட வரும் போது வீரர்கள் எச்சரிக்கையாக பேச வேண்டும். அவர் தன து செயலுக்கு பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்டுவிட்டார். நாங்கள் அவரை மன்னித்துவிட்டோம். அதற்காக இந்த விவகாரத் தை சாதாரணமாக எடுத்துக்கொண்டோம் என்று அர்த்தம் இல்லை. பெலுக்வாவ்யோ இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் இதை கவனிக்கவும் இல்லை. மொழி தெரியாததால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை’’ என்று தெரிவித்தார்.

_____________

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய 'தடுப்புசுவர்' புஜராவுக்கு பிறந்த நாள்!

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்க முக்கியக் காரணமாக இருந்தவர் பேட்ஸ்மேன் புஜாரா. 7 இன்னிங்சில் களமிறங்கி 521 ரன்கள் விளாசியது, இந்தியாவின் 71 ஆண்டுகளாக தாகம் தீர்க்க உதவியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டும் 3 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் என பேட்டிங் சராசரி 74.42 ஆக வைத்திருந்த புஜாரா, தொடர் நாயன் விருதை தட்டிச் சென்றார். இதனால், பாகுபலி, இந்திய அணியின் நவீனகால சுவர் உள்ளிட்ட பல பெயர்களை புஜாராவுக்கு சூட்டியுள்ளனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.

இந்நிலையில், புஜாரா நேற்று தனது 31-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு முன்னாள், இன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக், “நீங்கள் ஆடுகளத்தில் இருக்கும்போது, ‘பொறுமையின் சிலை’ ஆக இருக்கிறீர்கள், மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்” என கூறியுள்ளார். ஐசிசி தனது ட்விட்டரில், “டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட், இந்தியாவின் ராக்கிங் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் புஜாரா, டெஸ்டில் ஒரே இன்னிங்சில் 500 பந்துகளை எதிர்கொண்ட ஒரே இந்திய வீரர் என்ற சாதனைப் படைத்துள்ளார். அண்மையில், ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புஜாரா இரட்டை சதம் அடித்த வீடியோவை பதிவிட்டு, பிசிசிஐ வாழ்த்து தெரிவித்துள்ளது.

___________

WWE போட்டியில் களமிறங்கும் ‘தல’ டோனி?

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோனி 3 ஒரு நாள் போட்டிகளிலும் அரை சதம் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றார். டோனியைப் பாராட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ட்விட்டரில், “சாப்பிடு, தூங்கு, போட்டியை வெல், அதையே திரும்பச் செய்” என குறிப்பிட்டிருந்தது. ஐசிசி-யின் ட்விட்டர் பதிவை குறிப்பிட்டு, டபிள்யூ.டபிள்யூ.இ போட்டியில் விளையாடும் யுனிவெர்சல் சாம்பியன் ப்ரோக் லெஸ்னரின் வழக்கறிஞர் ஹேமன் ராயல்டி கேட்டடிருந்தார். அவரது ட்விட்டரில், “WWE சாம்பியன் ப்ரோக் லெஸ்னரின் #EatSleepConquerRepeat என்ற ஸ்லோகனை டோனியைப் புகழ ஐசிசி பயன்படுத்தியுள்ளது.

அதனால், எங்களுடைய ராயல்டியை ரொக்கப் பணம், காசோலை மற்றும் பங்குகளாக செலுத்தலாம்” என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த ஐசிசி, “உங்களுக்கும், ப்ரோக் லெஸ்னருக்கு உலகக் கோப்பை தொடரைப் பார்ப்பதற்கான டிக்கெட் வழங்கிறோம்” எனக் கூறியிருந்தது. இந்நிலையில், வரும் திங்கள் கிழமை (ஜன.28) நடைபெறும் WWE ராயல் ரம்பிள் போட்டியில் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோனியைக் காண ஆர்வமாக இருக்கிறீர்களான என WWE தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளது. இதற்கு ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள், பதிலளித்து வருகின்றனர்.

___________

மே.இ.தீவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து 77 ரன்னில் சுருண்டது

பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 77 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 264 ரன் எடுத்திருந்தது. 2-ம் நாளில் வெஸ்ட் இண்டீஸ் 289 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹெட்மையர் 81 ரன் எடுத்தார். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசின் அபார பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 30.2 ஓவரில் 77 ரன்னுக்குள் சுருண்டது. அதிகபட்சமாக ஜென்னிங்ஸ் 17 ரன் எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் ரோச் 11 ஓவர் வீசி 17 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். ஹோல்டர், ஜோசப் தலா 2 விக்கெட்டும், கேப்ரியல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

212 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 127 ரன் எடுத்து இருந்தது. அந்த அணி இதுவரை 339 ரன் முன்னிலை பெற்று உள்ளது. கைவசம் 4 விக்கெட் உள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் வலுவான நிலையில் உள்ளது.
____________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து