முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாய்னா நேவால் இறுதிப்போட்டிக்கு தகுதி

சனிக்கிழமை, 26 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

ஜகார்த்தா : இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறினார்.

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டமொன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் சீனாவின் ஹே பிங்ஜியாவோவை எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால் 18-21, 21-12, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

தாய்லாந்து வீராங்கனை...

முன்னதாக நடைபெற்ற காலிறுதி ஆட்டமொன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் தாய்லாந்தின் போர்ன்பவீ சோசுவாங்கை எதிர்கொண்டார். இதில் சாய்னா 21-7, 21-18 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

கிதாம்பி வெளியேற்றம்

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்தி கிதாம்பி இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 18-1, 19-21 எனத் தோல்வியடைந்து வெளியேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து