முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்கள், மகளிர் அணிகள் பங்குபெறும் 2020 - 'டி-20 உலகக்கோப்பை' போட்டி அட்டவணை வெளியீடு - முதல் ஆட்டத்தில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது

செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

துபாய் : ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி-20 உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.முதல் ஆட்டத்தில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

2007-ல் அறிமுகம்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை ஐ.சி.சி. 2007-ல் அறிமுகப்படுத்தியது. அறிமுக உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. 2009-ல் பாகிஸ்தானும், 2010-ல் இங்கிலாந்தும், 2012-ல் வெஸ்ட்இண்டீசும், 2014-ல் இலங்கையும், 2016-ல் வெஸ்ட் இண்டீசும் உலகக்கோப்பையை கைப்பற்றியது.

பெண்கள் அணி

பெண்கள் அணிகளுக்கான தொடர் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இதில் சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் மோதுகின்றன. மார்ச் 8ஆம் தேதி மெல்போர்னில் இறுதிப் போட்டி நடக்கிறது.

அட்டவணை வெளியீடு

7-வது டி-20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு (2020) அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டுள்ளது. ஐ.சி.சி. தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 9-வது மற்றும் 10-வது இடங்களில் உள்ள இலங்கை, வங்காளதேசம், மற்றும் 6 இதர அணிகள் தகுதி சுற்றில் விளையாட வேண்டும். இதில் இருந்து 4 அணிகள் தகுதி பெறும்.

தரவரிசையில் முதல் 2 இடங்களில் இருப்பதால் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற வில்லை.

ஆண்கள் அணி :

1) ‘ஏ’ பிரிவு: பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, தகுதிபெறும் அணிகள்.
2) ‘பி’ பிரிவு: இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், தகுதிபெறும் அணிகள்.
3) 20 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.
தகுதி போட்டிகள் அக்டோபர் 18 - 23
குரூப் போட்டிகள்  (அக்டோபர் 24 முதல்  நவம்பர் 8)
அரையிறுதி போட்டி : நவம்பர் 11 மற்றும் 12
இறுதி போட்டி : நவம்பர் 15
இந்திய அணி போட்டி விவரம்
அக் 24 : இந்தியா- தென்ஆப்பிரிக்கா.
அக் 29 : இந்தியா- தகுதி பெறும் அணி (ஏ-2).
நவ 1 : இந்தியா- இங்கிலாந்து.
நவ 5 : இந்தியா- தகுதிபெறும் அணி (பி-1)
நவ 8 : இந்தியா- ஆப்கானிஸ்தான்.

பெண்கள் அணி...

குரூப் 1: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, இலங்கை, தகுதி 1.
குரூப் 2: இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், தகுதி 2.
10 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடர் 23 போட்டிகளாக 2020 பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்திய அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
1) பெண்கள் குரூப் போட்டிகள்  (பிப்ரவரி 21 - மார்ச் 3)
2) அரை இறுதி போட்டி : மார்ச் 5
3) இறுதி போட்டி : மார்ச் 8
ஒரே நாட்டில், ஒரே ஆண்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நடப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து