முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 4-வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவின் அதிரடி தொடருமா?

புதன்கிழமை, 30 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

ஹாமில்டன் : நியூசிலாந்து - இந்தியா இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. இதில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா என்று ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரை கைப்பற்றியது....

இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 3 ஒருநாள் போட்டியிலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது. நேப்பியரில் நடந்த முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்ற 2-வது போட்டியில் 90 ரன் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

கோலிக்கு ஓய்வு...

இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று (31-ந்தேதி) நடக்கிறது. முதல் 3 போட்டியில் வெற்றி பெற்றது போலவே இந்த ஆட்டத்திலும் இந்திய வீரர்களின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு எஞ்சிய 2 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றுய ஆட்டத்துக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருப்பார். விராட் கோலி இடத்தில் புதுமுக வீரர் ஷூப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

சிராஜ், ஜடேஜா...

கடந்த போட்டியில் காயம் காரணமாக டோனி ஆடவில்லை. அவர் முழு உடல் தகுதி பெற்றால் மட்டுமே இன்றைய போட்டியில் ஆடுவார். இதனால் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெறுவது குறித்து உறுதியாக தெரியவில்லை. இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டதால் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். முகமது சிராஜ், ஜடேஜா ஆகியோர் விளையாட தயார் நிலையில் உள்ளனர். இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. பேட்டிங்கில் தவான், ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோரும், பந்துவீச்சில் முகமது ‌ஷமி, சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

அணியில் மாற்றம்...

நியூசிலாந்து சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் 4-வது மற்றும் 5-வது ஒருநாள் போட்டிக்கான அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரேஸ்வெல், சோதி நீக்கப்பட்டு நீஷம், ஆஸ்ட்லே சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து ஆறுதல் வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வத்தில் நியூசிலாந்து உள்ளது. கேப்டன் வில்லியம்சன், முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் மட்டுமே அந்த அணியில் சிறப்பாக பேட்டிங் செய்கிறார்கள். இதனால் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

105-வது போட்டி

இரு அணிகளும் இன்று மோதுவது 105-வது போட்டியாகும். இதுவரை நடந்த 104 போட்டியில் இந்தியா 54-ல், நியூசிலாந்து 44-ல் வெற்றி பெற்றுள்ளன. 1 ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. 5 போட்டிகளில் முடிவு இல்லை. இன்றை ய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து