முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு எதிரான 3 டி-20 போட்டி: நியூசிலாந்து அணி அறிவிப்பு - 2 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு

புதன்கிழமை, 30 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

வெலிங்டன் : இந்திய அணிக்கு எதிரான மூன்று 20 ஓவர் போட்டிக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி நடக்கிறது. பிப்ரவரி 6, 8 மற்றும் 10-ந்தேதிகளில் இந்த போட்டி நடக்கிறது. இதற்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டேரியல் மிக்சேல், பிளேயர், டிக்ளேர் ஆகிய 2 புதுமுக வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து அணி வீரர்கள் விவரம்:

கனே வில்லியம்சன் (கேப்டன்),   டக்  பிரேஸ்வெல், கோலின் டி கிராண்ந்ஹோம், பெர்குசன், (முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டும்) மார்டின் குப்தில், ஸ்காட் குக்கெலின், டேர்ல் மிட்செல், கோலின் முன்ரோ, மிட்செல் சாண்ட்னர், டிம் செபெர்ட் (விக்கெட் கீப்பர்), இஷ் சோதி, டிம் சவுதி, ரோஸ் டெய்லர், பிளேர் டிக்னெர் (மூன்றாவது போட்டிக்கு மட்டும்).

6-ம் தேதி முதல் போட்டி...

நியூசிலாந்து - இந்தியா மோதும் முதல்  20 ஓவர் போட்டி வெல்லிங்டனில் வரும் பிப்ரவரி 6-ம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி பறிகொடுத்துள்ள நிலையில், 20 ஓவர் போட்டித் தொடரை கைப்பற்ற நியூசிலாந்து அணி தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து