முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்ட்னர்ஷிப்பில் அதிக சதம்: ரோகித் - கோலி ஜோடி முன்னேற்றம்

புதன்கிழமை, 30 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

நேப்பியர் : ஒருநாள் போட்டியில் அதிக சதம் கண்ட ஜோடியில் ரோகித் சர்மா - விராட் கோலி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

கோலி அபாரம்...

நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 243 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 244 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் தவான் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 62 ரன்னிலும், விராட் கோலி 60 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

3-வது இடம்...

இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்தனர். இது இருவருடைய பார்ட்னர்ஷிப்பில் அடித்த 16-வது சதமாகும். இதன்மூலம் பார்ட்னர்ஷிப்பில் அதிக சதம் அடித்த ஜோடியில் 3-வது இடத்தை பிடித்துள்ளனர். சச்சின் தெண்டுல்கர் - சவுரவ் கங்குலி ஜோடி 26 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. தில்சன் - குமார் சங்ககரா ஜோடி 20 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. கில்கிறிஸ்ட் - ஹெய்டன் ஜோடி 16 சதங்கள் அடித்து ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடியுடன் 3-வது இடத்தை பகிர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து