முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் டாப் 10 மோசமான 'ஆல்-அவுட்'

வியாழக்கிழமை, 31 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டிகளில் டாப் 10 மோசமான ஆல் அவுட் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணி குறைந்த ரன்களில் ஆல் அவுட்டாவது இது முதல் முறை இல்லை. இதுபோல, ஆல் அவுட்டான டாப் 10 நிகழ்வுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

1) 2000 - ஷார்ஜாவில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெறும் 54 ரன்களில் ஆல் அவுட்டானது. டாப் 10 வரிசையில் முதல் இடத்தில் இதை சொல்லலாம்.
2) 1981 - சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 63 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
3) 1986 - கான்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்தியா 78 ரன்களில் சுருண்டது.
4) 1978 - சியால்கோட்டில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 79 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டானது.
5) 2010 - தம்புல்லாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில்  88 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது.
6) 2006 - டர்பனில் நடந்த தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 91 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட்டானது.
7) 2000 - சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியா உடனான போட்டியில் 100 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
8) 1993 - அகமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 100 ரன்களில் ஆட்டமிழந்தது.
9) 2008-ல் கொழும்புவிலும், 2010-ல் தம்புல்லாவிலும், நடந்த இலங்கைக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
10) நடப்பு ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாமில்டனில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 92 ரன்களுக்கு ஆல் அவுட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து