முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படித்தவர்களுக்கு எச் -1 பி விசாவில் முன்னுரிமை

வெள்ளிக்கிழமை, 1 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படித்தவர்களுக்கு ‘எச்-1 பி’ விசாக்களை பெறுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் 3 - ஆண்டுகள் தங்கி இருந்து வேலை பார்ப்பதற்கு வழங்கப்படுகிறது எச்-1 பி விசா. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் எச்-1 பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்ற 20 ஆயிரம் பேருக்கு கூடுதலாக இந்த விசா வழங்கப்படும். எச்-1 பி விசாக்களில் 70 சதவீதத்துக்கும் மேலாக இந்தியர்களே பெறுகிறார்கள்.

அதாவது எச்-1 பி’ விசா மூலம் இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் இந்தியர்களால் நடத்தப்படும் தொழில்நுட்ப நிறுவனங்களே அதிகம் பயன்பெறுகின்றன. எச் - 1 பி விசா பெறுவதற்கான விதிமுறைகளை கடுமையாக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார். அந்த வகையில் அவரது நிர்வாகம் ‘எச்-1 பி’ விசாக்களை பெற புதிய நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படித்தவர்களுக்கு எச்-1 பி விசாக்களை பெறுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து