முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி அரேபியாவில் கனமழை: 12 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 1 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

ரியாத், சவுதி அரேபியாவில் பெய்த கடுமையான மழைக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து சவுதி மன்னரின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறுகையில், சவுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்ததன் காரணமாக சவுதி அரேபியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. இதில் 12 பேர் பலியாகியுள்ளனர். இதில் 10 பேர் தபுக் நகரைச் சேர்ந்தவர்கள். கனமழையில் சிக்கிய 200 -க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

தபுக் நகரில் பல இடங்களில் ஓடும் வெள்ளத்தில் மக்கள் சிக்கிக் கொண்டுள்ளதாகவும், அவர்களை பல மணி நேரப் போராட்டங்களுக்குப் பின்னர் மீட்புப் படையினர் மீட்டனர் என்று சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வெப்பச் சலனம் காரணமாக பல நாடுகளில் ஓராண்டு பெய்ய வேண்டிய மழை ஒருசில நாட்களுக்குள் பெய்து பெரும் வெள்ளத்தை ஏற்படுத்திவிடுகிறது. இம்மாதிரியான வானிலைத் தன்மை பாலைவன நாடுகளாக அடையாளப்படுத்தப்படும் மத்திய கிழக்கு நாடுகளில் சமீபகாலமாக தொடர்ந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து