முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி - வெல்லிங்டனில் இன்று நடக்கிறது

சனிக்கிழமை, 2 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

வெல்லிங்டன் : இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வெல்லிங்டனில் இன்று நடைபெறுகிறது.

4-வது போட்டியில்...

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒரு நாள் போட்டியில் இந்திய அணி முதல் 3 ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. 4-வது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வெல்லிங்டனில் இன்று (3-ந்தேதி) நடக்கிறது.

பதிலடி கொடுக்கும்...

கடைசி 2 ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஒய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் இல்லாத இந்திய அணி கடந்த ஆட்டத்தில் 92 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. இதற்கு பதிலடி கொடுத்து இன்றைய ஆட்டத்தில் வென்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும் ஆர்வத்துடன் இந்திய அணி உள்ளது. தற்காலிக கேப்டன் ரோகித்சர்மா தலைமையிலான அணி கடைசி போட்டியில் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தினேஷ் கார்த்திக்...?

அனுபவம் வாய்ந்த டோனி இல்லாதது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. காயம் காரணமாக அவர் 2 போட்டியில் விளையாடவில்லை. இன்றைய ஆட்டத்துக்காவது அவர் உடல் தகுதி பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. டோனி இடம் பெற்றால் தினேஷ் கார்த்திக் கழற்றிவிடப்படுவார். பந்து வீச்சிலும் மாற்றம் கொண்டு வரப்படலாம்.

முத்திரை பதித்தது...

சொந்த மண்ணில் தொடரை இழந்த நியூசிலாந்து அணி கடந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடியது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முத்திரை பதித்தது. வேகப்பந்து வீரர் டிரென்ட் போல்ட்டின் பந்து வீச்சு கடந்த போட்டியில் அபாரமாக இருந்தது. அவர் 5 விக்கெட் வீழ்த்தி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தார். இதேபோல கிராண்ட் ஹோமும் சிறப்பாக பந்து வீசினார்.

106-வது போட்டி...

பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன், முன்னாள் கேப்டன் டெய்லர், நிக்கோலஸ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளும் இன்று மோதுவது 106-வது போட்டியாகும். இதுவரை நடந்த 105 போட்டியில் இந்தியா 54-ல், நியூசிலாந்து 45-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 போட்டி முடிவு இல்லை. 1 ஆட்டம் ‘டை’ ஆனது. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ஸ்ட் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து