முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு வீரர்களுடன் விஜய் மகள் சாஷா

சனிக்கிழமை, 2 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தனது மகனை வேட்டைக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தினார். அண்ணன் மீடியா உலகில் கால்பதிக்க இருப்பதை அவ்வப்போது தெரியப்படுத்தி வரும் நிலையில் தங்கை சாஷா விளையாட்டில் கவனம் செலுத்தி வருவது தற்போது தெரியவந்துள்ளது.

சென்னையில் உள்ள அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் படித்துவரும் சாஷா தனது பள்ளியின் பேட்மிண்டன் குழுவில் இடம்பெற்றுள்ளார். இந்தக் குழுவினர் சமீபத்தில் கலந்துகொண்ட 3 போட்டிகளில், ஒரு போட்டியில் வெற்றி பெற்றதாக கூறப்பட்டுள்ளது. அதற்கான புகைப்படங்களை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து