ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது

ஞாயிற்றுக்கிழமை, 3 பெப்ரவரி 2019      வர்த்தகம்
GST 2018 12 14

புதுடெல்லி : ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்துக்கு 503 கோடி வசூலானதாக மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரியை வசூலிக்கும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த முறையில் வசூலாகும் வரி வருவாய் குறித்து மாதந்தோறும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.அந்த வகையில் கடந்த மாதம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்துக்கு 503 கோடி வரி வசூலானதாக மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வசூலான தொகையை (ரூ.89,825 கோடி) விட 14 சதவீதம் அதிகமாகும். நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு பொருட்களின் வரியை குறைத்த போதும், ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை கடந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. 

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து