முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனியின் அசத்தல் ரன் அவுட்

ஞாயிற்றுக்கிழமை, 3 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முன்வரிசை வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா (2), தவான் (6) , ஷுப்மன் கில் (7), டோனி (1) என ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அம்பதி ராயுடு (90), விஜங் சங்கர் (45), ஹர்திக் பாண்டியா (45) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் 252 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து, 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி, 44.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால், 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் மகேந்திர சிங் டோனி. போட்டியில், நியூசிலாந்து அணி 176 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தாலும், அந்த அணியின் நீஷம் 44 ரன் எடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அப்போது, 37-ஓவரின் 2-வது பந்தில் எல்.பி.டபுள்யூ கேட்பதுபோல் கத்திய டோனி, பேட்ஸ்மேன் கிரீஸுக்கு வெளியே நிற்பதைப் பார்த்த உடனே ரன் அவுட் செய்தார். டோனி செய்த இந்த ரன் அவுட்தான், கடைசி ஒரு நாள் போட்டியில் முக்கியத் திருப்பமாக அமைந்தது. அந்த அணியில் அதிகபட்ச ரன்கள் நீஷம் எடுத்ததுதான். தற்போது, டோனி செய்த ரன் அவுட் வீடியோ வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து