முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் பனிமூட்டம்- விமான, ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டத்தினால், விமானங்கள், ரயில்கள் போன்ற போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. பொழுது விடிந்து வெகுநேரம் ஆகியும் பனி விலகுவதில்லை. முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் டெல்லியில் பனி மூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. நேற்றும் பனிமூட்டம் கடுமையாக இருந்தது. டெல்லியின் ஆர்.கே. புரம் பகுதியில்  விடிந்து வெகுநேரம் ஆகியும் கட்டிடங்கள், நீர்நிலைகள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் கடுமையாக இருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து