முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. - நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி: ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா 2-வது இடத்திற்கு முன்னேற்றம் - டோனியும் 3 இடங்கள் முன்னேறினார்

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

துபாய் : ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வென்ற இந்தியா, ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பேட்டிங் தரவரிசையில் விராட் கோலியும், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பும்ராவும் முதலிடத்தில் நீடிக்கின்றனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டோனி 3 இடங்கள் முன்னேறியுள்ளார்.

122 புள்ளகளுடன்...

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 2-1 எனவும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 4-1 எனவும் கைப்பற்றியது. இதனால் ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 122 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதல் இடத்தில உள்ளது. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தலா 111 புள்ளிகள் பெற்று முறையே 3 மற்றும் 4-வது இடத்தைப் பிடித்துள்ளன. பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன 6-வது இடத்தில் உள்ளது.

887 புள்ளிகளுடன்...

பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி 887 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரோகித் சர்மா 854 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா 808 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். டிரென்ட் போல்ட் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். குல்தீப் யாதவ் 4-வது இடத்திற்கு பின்தங்கினார். சுழற்பந்து வீச்சாளர் யஜ்வேந்திர சஹல் ஒரு இடம் முன்னேறி 5வது இடத்திலும் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 6 இடங்கள் முன்னேறி 17வது இடத்திலும் உள்ளனர்.

டோனிக்கு 17-வது இடம்

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்புடன் விளையாடி தொடர் நாயகன் விருது வென்ற மகேந்திர சிங் தோனி பேட்டிங் தரவரிசை பட்டியலில் 3 இடங்கள் முன்னேறி 17வது இடத்திற்கு வந்துள்ளார்.  கேதர் ஜாதவ் 8 இடங்கள் முன்னேற்றம் அடைந்து 35வது இடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து