முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனந்தா புஷ்கர் மர்ம மரண வழக்கு: டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றம்

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கு டெல்லி அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

சுனந்தா புஷ்கர் கடந்த 2014, ஜனவரியில் டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட டெல்லி போலீஸார், சசி தரூர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 498-ஏ (ஒரு பெண்ணை அவரது கணவர் அல்லது கணவரின் உறவினர் கொடுமைப்படுத்துதல்) மற்றும் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். என்றாலும் சசி தரூர் கைது செய்யப்படவில்லை.

இந்த வழக்கின் விசாரணை, டெல்லி பெருநகர கூடுதல் முதன்மை நீதிபதி சமர் விஷால் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 306-வது பிரிவின் கீழ் வரும் குற்றத்தை அமர்வு நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதால், இந்த வழக்கை கூடுதல் அமர்வு நீதிபதி அருண் பரத்வாஜுக்கு மாற்றி நீதிபதி சமர் விஷால் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

மேலும் இந்த விவகாரத்தில் விஜிலென்ஸ் அறிக்கையை பாதுகாக்கும்படி டெல்லி போலீஸாருக்கு உத்தரவிட்டார்.சசி தரூர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால் அவருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து