அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை - நடிகர் மோகன்லால் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2019      சினிமா
actor mohanlal 2019 02 05

திருவனந்தபுரம் : அரசியலுக்கு வரமாட்டேன் என்று பிரபல மலையாள நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தி நடிகர் அக்ஷய்குமார், மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்கள் உள்ளிட்ட 70 பிரபலங்களை களமிறக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.கேரளாவில் சபரிமலை விவகாரத்தில் இடதுசாரி அரசுக்கு எதிராக போராடிவரும் பா.ஜ.க மக்களவைத் தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை வகுக்கிறது. இதன் ஒரு பகுதியாக மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலை களமிறக்க திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியானது.

இந்நிலையில் கேரள பா.ஜ.க தலைவர் ராஜகோபால் அளித்த பேட்டியில், “2019 தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட மோகன்லாலிடம் பா.ஜ.க பேசி வருகிறது” என்றார். இதனால் அவர் பா.ஜ.கவில் இணைந்து போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கு அவருடைய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில் அரசியலில் குதிக்கும் திட்டமில்லை என்று மோகன்லால் அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது,

 “எனக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை. நான் தொடர்ந்து நடிகனாகவே இருக்க விரும்புகிறேன். இந்தத் துறையில் நான் சுதந்திரமாக செயல்பட முடிகிறது. ஆனால் அரசியலிலோ உங்களை நம்பி ஏராளமான பேர் இருப்பார்கள். எனவே அது எளிதானது அல்ல. எனக்கு அதுபற்றியும் தெரியாது. அரசியலுக்கு வரமாட்டேன். பா.ஜ.க.வில் சேரும் விருப்பமும் இல்லை” என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து