முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'சுப்ரீம் கோர்ட் உத்தரவு: மம்தா பானர்ஜி கருத்து

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிராக எந்த கடும்நடவடிக்கையும் எடுக்கக்கூடாது, கைது செய்யக்கூடாது .என்று சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐக்கு உத்தரவிட்டு இருப்பது எனக்குக் கிடைத்த வெற்றி அல்ல, தேசத்துக்குக் கிடைத்ததாகும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். எங்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல. தேசத்துக்குக் கிடைத்த வெற்றி. நாங்கள் ஒருபோதும் விசாரணைக்கு ஒத்துவைக்கமாட்டோம் எனக் கூறவில்லை. இது அரசியல்பழிவாங்கல் நடவடிக்கை என எங்களுக்குத் தெரியும்.

நான் ராஜீவ்குமாருக்கு ஆதரவாக மட்டும் இங்கு போராட்டம் நடத்தவில்லை, லட்சக்கணக்கான மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்துகிறேன். சி.பி.ஐ நடவடிக்கைக்குப் பின் சில கதைகள் இருக்கிறது. யாரும் மோடிக்கு எதிராகப் பேசக்கூடாது. ஒற்றுமையாக இருந்து போராடுவோம். நாங்கள் எப்போதும் சட்டத்திற்கு மதிப்பளிக்கிறோம், சட்டத்தின்படி நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து