முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2019 உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்பிராஸ் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

லாகூர் : 2019 உலகக்கோப்பைக்கான எங்கள் அணியின் கேப்டனாக சர்பிராஸ் அகமதுதான் இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

விளையாட தடை...

தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. அப்போது தென்ஆப்பிரிக்க வீரர் பெலுக்வாயோவுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையில் சர்பிராஸ் அகமது பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஐசிசி சர்பிராஸ் அகமதுக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடைவிதித்தது. இதனால் உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்பிராஸ் அகமது செயல்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

பாக். கிரிக்கெட்...

ஆனால், நான்தான் கேப்டனாக இருப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த சர்பிராஸ் அகமது, இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சர்பிராஸ் அகமதுதான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

சிறந்த வீரர்...

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான தயார் திட்டத்தில் சர்பிராஸ் அகமதும் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளார். சிறந்த தலைவர், சிறந்த வீரர் என்பதை நிரூபித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை அவர் தலைமையில்தான் பாகிஸ்தான் வென்றது. ஐசிசி டி20 தரவரிசையிலும் பாகிஸ்தான் முதல் இடத்தை பிடித்துள்ளது. உலகக்கோப்பை தொடருக்குப் பின் மறுமதிப்பீடு செய்யும் வரை அவர்தான் கேப்டனாக இருப்பார்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து